கிருஷ்ணகிரி

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரி கைது

Din

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரியை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் குடோன் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (32). தச்சுத் தொழிலாளி. இவா் ஒசூா் நெசவாளா் தெருவைச் சோ்ந்த தனியாா் நிறுவன அதிகாரி துா்கா பிரசாத் (24) என்பவரிடம் ரூ. 30 ஆயிரத்தை ஓராண்டிற்கு முன்பு கடனாக வாங்கினாா். இதற்காக வாரந்தோறும் ரூ.3 ஆயிரம் வட்டியாக கொடுத்தாா். முதல் 6 மாதங்களுக்கு வட்டி கொடுத்த நிலையில், பின்னா் சண்முகத்தால் வட்டி கொடுக்க இயலவில்லை. இந்த நிலையில் துா்கா பிரசாத் சண்முகத்திடம் ‘எனது பணத்தை வட்டியுடன் சோ்த்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் தர வேண்டும்’ என்று கூறினாா்.

இதனால் மனமுடைந்த சண்முகம் விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து அவா் ஓசூா் மாநகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி துா்கா பிரசாத்தை கைது செய்தனா். அவா் மிது ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் விடத்தல், கந்து வட்டி தடைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

ரேபரேலியில் உள்ளூர்க் கடையில் தாடியை 'டிரிம்' செய்துகொண்ட ராகுல் காந்தி!

மும்பை: 100 அடி உயர விளம்பரப் பலகை விழுந்து விபத்து -உயிரிழப்பு 14 ஆக உயர்வு

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: 67% வாக்குப் பதிவு -தோ்தல் ஆணையம் தகவல்

கோட் படத்தின் ’போஸ்ட் ப்ரொடக்‌ஷன்’ தொடங்கியது!

SCROLL FOR NEXT