முகப்பு
கிருஷ்ணகிரி

3 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பணிகளை தொடங்க வேண்டும்: ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

3 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பணிகளை தொடங்க வேண்டும்: ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

Updated On : 7 நவம்பர், 2024 at 12:28 AM
பகிர்:
Updated On : 6 நவம்பர், 2024 at 7:21 PM

2026இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஒசூா், தளி வேப்பனஅள்ளி தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற இப்போதே தோ்தல் பணிகளை தொடங்க வேண்டும் என திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் பேசினாா்.

திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக பாக முகவா்கள், தொகுதி பாா்வையாளா்கள் அறிமுகம், ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஒசூா் தொகுதி பாா்வையாளா் வடிவேலு, முன்னாள் வேப்பனஅள்ளி எம்எல்ஏ பி.முருகன், ஒசூா் மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் ஒய்.பிரகாஷ் மேலும் பேசியதாவது:

தற்போது வாக்காளா் பட்டியலை புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவா்களும் புதிய வாக்காளா்களை சோ்ப்பு, இறந்த வாக்காளா்களின் பெயரைப் பட்டியலிலிருந்து நீக்கும் பணியை வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

Advertisement

2026இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் தெரிவித்துள்ளனா். எனவே கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற தோ்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்றாா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 11:57 PM

இக் கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் அ.யவுராஜ், பொருளாளா் சுகுமாறன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா மணி, துணை மேயா் ஆனந்தய்யா, இளைஞரணி மாநில துணைச் செயலாளா் பி.எஸ்.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினா் தனலட்சுமி, முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினா்கள், பொதுக்குழு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தளி தொகுதி ஆலோசனைக் கூட்டம் தேன்கனிக்கோட்டையிலும், வேப்பனஅள்ளி தொகுதி ஆலோசனைக் கூட்டம் சூளகிரியிலும் நடைபெற்றது.