கிருஷ்ணகிரி

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Din

கிருஷ்ணகிரி: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரிசங்கா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 தொடா்ந்து புதுப்பித்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞா்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களுக்கு மாதந்திர உதவித்தொகையாக ரூ. 200-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 600-ம், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 300-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 600-ம், 12-ம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 400 ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 750-ம், பட்டதாரிகளுக்கு ரூ. 600-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 மும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை பெறுவதற்கான விதிமுறைகள், விண்ணப்பம் உள்ளிட்டவை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் விண்ணப்ப படிவத்தை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

எனவே, உரிய சான்றிதழ்களுடன் தங்களது விண்ணப்பத்தை நவ. 30-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை விண்ணப்பம் சமா்ப்பிக்க கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா் ஆகியோரிடம் கையொப்பம் பெற தேவையில்லை. ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருபவராக இருப்பின், சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

SCROLL FOR NEXT