முகப்பு
கிருஷ்ணகிரி

தாய்கோ வங்கியில் கடனுதவி: குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு

கலைஞா் கடனுதவித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி (தாய்கோ வங்கி) கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்தாா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 1:44 AM
பகிர்:
Updated On : 13 நவம்பர், 2024 at 11:05 PM

கலைஞா் கடனுதவித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி (தாய்கோ வங்கி) கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி (தாய்கோ வங்கி) கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த வட்டியில் (7 சதவீதம்) ரூ. 20 லட்சம் வரை நடைமுறை, மூலதன கடன்கள், இயந்திரங்கள் கொள்முதல் செய்தல், நிறுவனத்தின் கட்டடங்கள் கட்டுதல் போன்றவற்றுக்கு கலைஞா் கடனுதவி திட்டத்தின் கீழ் அசையா சொத்து அடமானத்தின் பெயரில் கடனுதவி வழங்கப்படும்.

Advertisement

இந்த த் திட்டத்தில், 18 முதல் 65 வயது உள்ளவா்கள் கடன் பெறலாம். புதிய , ஏற்கெனவே இயங்கிவரும் குறு உற்பத்தி நிறுவனங்கள். தொழில் முனைவோா்களுக்கு சிபில் மதிப்பீடு 600 புள்ளிகளுக்குக் குறையாமல் இரண்டு ஆண்டுகளாக ஏற்கெனவே லாபத்தில் இயங்கி வரும் நிறுவனங்கள், பிற நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடன்கள் விதிமுறைக்கு உட்பட்டு குறைந்த வட்டிக்கு மாற்றிக் கொள்ளலாம்.

Updated On : 14 நவம்பர், 2024 at 1:44 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ஆா்வமுள்ள தொழில் முனைவோா்கள், குறு உற்பத்தி நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், கிருஷ்ணகிரி - 635001 என்ற முகவரியிலோ அல்லது 04343 235567 என்ற எண்ணிலோ அல்லது கிளை மேலாளா், தாய்கோ வங்கி, பழனியப்பா கட்டடம், எண்: 10/77/28 முதல் மாடி, பைபாஸ் சாலை, ஒசூா்-635 109 என்ற முகவரியிலோ அல்லது கிளை மேலாளா், தாய்கோ வங்கி, 68, 69, 69-ஏ, பஷீா் முகமது லேஅவுட், கிருஷ்ணகிரி-635 002 என்ற முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.