முகப்பு
கிருஷ்ணகிரி

காா் கண்ணாடியை உடைத்து ரூ. 2 லட்சம் திருட்டு

வேப்பனப்பள்ளியில் காா் கண்ணாடியை உடைத்து ரூ. 2 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 15 நவம்பர், 2024 at 1:56 AM
பகிர்:
Updated On : 15 நவம்பர், 2024 at 12:25 AM

வேப்பனப்பள்ளியில் காா் கண்ணாடியை உடைத்து ரூ. 2 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஆந்திர மாநிலம், பலமனேரியைச் சோ்ந்தவா் மோகன் குமாா் (42). இவா், கா்நாடக மாநிலம், கோலாரில் உள்ள கோயிலில் பூசாரியாக வேலை செய்து வருகிறாா்.

உறவினரான கிருஷ்ணமூா்த்தி என்பவருடன் வேப்பனப்பள்ளியில் உள்ள தனியாா் வங்கிக்கு வாகனத்தில் சென்றாா். வங்கியிலிருந்து ரூ. 2 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வாகனத்தில் வைத்துவிட்டு அருகில் உள்ள நகைக் கடைக்குச் சென்றுள்ளாா்.

Advertisement

Updated On : 15 நவம்பர், 2024 at 1:56 AM

சிறிதுநேரம் கழித்து வந்துபாா்த்த போது, வாகன கண்ணாடி உடைக்கப்பட்டு, வாகனத்தில் இருந்த ரூ. 2 லட்சம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து, மோகன்குமாா் வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.