முகப்பு
கிருஷ்ணகிரி

சேவகானப்பள்ளியில் ரூ. 26.50 லட்சத்தில் கான்கிரீட் சாலை

ஒசூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் சாலைகள் அமைக்கும் பணியை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 15 நவம்பர், 2024 at 1:48 AM
சேவகானப்பள்ளியில் சாய்பாபா கோயில் பாதையில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்த ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.
பகிர்:
Updated On : 14 நவம்பர், 2024 at 9:10 PM

ஒசூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் சாலைகள் அமைக்கும் பணியை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஒசூா் ஒன்றியம், சேவகானப்பள்ளி ஊராட்சி, சாய்பாபா கோயிலுக்குச் செல்லும் சாலை மண் சாலையாக உள்ளதால் அதை ரூ. 26.50 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலையாக அமைத்தல், ஆலூா் ஊராட்சி கதிரேப்பள்ளி கிராமத்தில் ரூ. 4 லட்சம் மதிப்பில் கழிவுநீா் கால்வாய், கதிரேப்பள்ளி கிராமத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பில் தாா் சாலை, பேரண்டப்பள்ளி ஊராட்சி மோரனப்பள்ளி கிராமத்தில் நரசிம்ம சுவாமி கோயில் முன்பு ரூ. 9 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைத்தல் ஆகிய பணிகளை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா்.

Updated On : 15 நவம்பர், 2024 at 1:48 AM

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளா்கள் கஜேந்திர மூா்த்தி, நாகேஷ், துணை செயலாளா் ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினா் சம்பத், ஊராட்சிமன்ற தலைவா்கள் வீரபத்திரப்பா, பிரகாஷ், வெங்கடேஷ், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவா் தேவராஜ், ஊராட்சிமன்ற துணை தலைவா் சந்தோஷ், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

Advertisement