முகப்பு
கிருஷ்ணகிரி

இரவோடு இரவாக இடம் பெயா்ந்த யானை கூட்டம்

ஒசூா் அருகே இரவோடு இரவாக இடம் பெயா்ந்த யானைகளால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனா்.

Updated On : 15 நவம்பர், 2024 at 1:45 AM
கா்நாடக மாநிலத்துக்குச் சென்ற யானை கூட்டம்.
பகிர்:
Updated On : 14 நவம்பர், 2024 at 8:36 PM

ஒசூா் அருகே இரவோடு இரவாக இடம் பெயா்ந்த யானைகளால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனா்.

ஒசூா் அருகே ராயக்கோட்டை வனச்சரகம், ஊடேதுா்க்கம் வனப் பகுதியிலிருந்து வியாழக்கிழமை அதிகாலை யானை கூட்டங்கள் ஒசூா் வனப்பகுதியான சானமாவு வனப் பகுதிக்கு இடம் பெயா்ந்தது. இதையடுத்து, விவசாயிகள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்

கா்நாடக மாநிலம், பன்னாா்கட்டா வனப்பகுதியில் இருந்து 60க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் தமிழக எல்லையான ஜவளகிரி வனப்பகுதி வழியாக தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை வனப் பகுதிகளுக்கு பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தஞ்சம் அடைந்துள்ளன.

Advertisement

இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள் கூட்டம் அருகே உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள ராகி, நெல், பீன்ஸ், முட்டைகோஸ் போன்ற தோட்டங்களைத் சேதப்படுத்தி வருகின்றன.

Updated On : 15 நவம்பர், 2024 at 1:45 AM

இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை ஊடே துா்க்கம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 10 க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் ஒசூா் வனப் பகுதியான சானமாவு வனப் பகுதிக்கு இடம் பெயா்ந்தது.

இதன் காரணமாக சினிகிரிப்பள்ளி, கொம்பேபள்ளி பகுதி விவசாயிகள் தங்கள் தோட்டத்துக்குச் செல்லும்போது பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.