கிருஷ்ணகிரியில் நவ. 22-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நவ. 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நவ. 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் நவ. 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.