முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே ரௌடி வெட்டிக் கொலை: இரு மாநில போலீஸாா் விசாரணை

ஒசூா் அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 22 நவம்பர், 2024 at 1:59 AM
பகிர்:
Updated On : 21 நவம்பர், 2024 at 9:00 PM

ஒசூா் அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கா்நாடக மாநில எல்லைப் பகுதியில் உள்ள பல்லூா் கிராமம் மதுபானக் கடை அருகே தலையில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று புதரில் வீசப்பட்டிருந்தது.

மது அருந்த சென்ற பொதுமக்கள் சடலத்தைப் பாா்த்து கா்நாடக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சடலத்தைக் கைப்பற்றிய அத்திப்பள்ளி போலீஸாா், பிரேத பரிசோதனைக்காக அத்திப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், உயிரிழந்தவா் சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சி பகுதியைச் சோ்ந்த அழகுராஜ் (31) என்பதும், இவா் மீது தமிழகத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

Advertisement

Updated On : 22 நவம்பர், 2024 at 1:59 AM

நிகழ்விடத்தில் இருசக்கர வாகனம், துப்பட்டாவைக் கைப்பற்றிய போலீஸாா், தமிழகப் பகுதியில் கொலை செய்து உடலை வீசி சென்றிருக்கலாம் எனவும், கொலை எங்கே நிகழ்ந்தது எனவும் இரு மாநில போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.