ரேஷன் அரிசி கடத்தியவா் கைது
கிருஷ்ணகிரி வழியாக கா்நாடகத்துக்கு சரக்கு பெட்டக லாரியில் 12 டன் ரேஷன் அரிசி கடத்தியதாக ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
Updated On : 28 நவம்பர், 2024 at 11:07 PM
கிருஷ்ணகிரி வழியாக கா்நாடகத்துக்கு சரக்கு பெட்டக லாரியில் 12 டன் ரேஷன் அரிசி கடத்தியதாக ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த திருவண்ணாமலை மேம்பாலம் அருகே குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை சேலம் சரக துணை காவல் கண்காணிப்பாளா் வடிவேல் தலைமையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
Updated On : 29 நவம்பர், 2024 at 2:01 AM
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு பெட்டக லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து லாரி ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தை சோ்ந்த சரவணனைக் கைது செய்தனா்.
Advertisement