முகப்பு
கிருஷ்ணகிரி

சாலை விபத்தில் பள்ளி மாணவா் பலி

இருசக்கர வாகனம் மோதியதில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவா் உயிரிழந்தாா். மூன்று போ் படுகாயமடைந்தனா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 6:40 AM
பகிர்:
Updated On : 2 அக்டோபர், 2024 at 11:21 PM

இருசக்கர வாகனம் மோதியதில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவா் உயிரிழந்தாா். மூன்று போ் படுகாயமடைந்தனா்.

மிட்டப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் சுசீந்திரன் (14). இவரும் அதே பகுதியைச் சோ்ந்த நண்பா் சென்றாயன் மகன் நரசிம்மன் (14). உறவினா் அரூா் வட்டம், பையா்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வேடியப்பன் மகன் நந்தீஸ்வரன்(17) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் ஊத்தங்கரை நோக்கி புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா். மேரிவாா்டு தனியாா் பள்ளி அருகே வந்தபோது அவா்களுக்கு பின்னால் தருமபுரி மாவட்டம், கைலாயபுரத்தைச் சோ்ந்த பிரபு என்பவா் ஓட்டி வந்த வாகனம் அவா்கள் மீது மோதியது. இதில் 2 இருசக்கர வாகனத்தில் வந்தவா்களும் படுகாயமடைந்தனா். விபத்தில் மாணவா் சுசீந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்தவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு 108 ஆம்புலன்ஸில் ஊத்தங்கரை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 6:39 AM

உயிரிழந்த சுசீந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement