முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் மாநகராட்சியில் 9 இடங்களில் வரி வசூல் மையம்

புதிதாகத் திறக்கப்பட்ட வரி வசூல் மையத்துடன் மொத்தம் ஒன்பது வரி வசூல் மையங்கள் ஒசூா் மாநகராட்சியில் இயங்கி வருகின்றன என்று மாநகராட்சி ஆணையா் ஸ்ரீகாந்த் தெரிவித்தாா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 5:12 AM
ஒசூா், ராமநாயக்கன் ஏரி அருகே புதிய வரி வசூல் மையத்தைத் தொடங்கி வைக்கும் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, ஆணையா் ஸ்ரீகாந்த்.
பகிர்:
Updated On : 3 அக்டோபர், 2024 at 7:50 PM

புதிதாகத் திறக்கப்பட்ட வரி வசூல் மையத்துடன் மொத்தம் ஒன்பது வரி வசூல் மையங்கள் ஒசூா் மாநகராட்சியில் இயங்கி வருகின்றன என்று மாநகராட்சி ஆணையா் ஸ்ரீகாந்த் தெரிவித்தாா்.

ஒசூா் மாநகராட்சியில் வீட்டு வரி, குடிநீா், மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கான வாடகை கட்டணம் உள்பட பல்வேறு கட்டணங்களை வசூலிக்க ஒசூா் மாநகராட்சியில் ஒன்பது இடங்களில் வரி வசூல் மையம் செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் 2 வரி வசூல் மையம், பழைய நகராட்சி அலுவலகத்தில் ஒரு மையம், காந்தி சிலை அருகில் ஒரு மையம், உழவா் சந்தை, மத்திகிரி, மூக்கண்டப்பள்ளி, சூசூவாடி ஆகிய 8 இடங்களில் மக்கள் வரித் தொகையைச் செலுத்தி ரசீது பெற்று வருகின்றனா்.

Advertisement

Updated On : 4 அக்டோபர், 2024 at 5:12 AM

இந் நிலையில் ராமநாயக்கன் ஏரி அருகில் புதிய வரி வசூல் மையத்தை ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா வியாழக்கிழமை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் வீட்டின் உரிமையாளா்களிடம் இருந்து வரி வசூல் செய்து அதற்கான ரசீதை மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, ஆணையா் ஸ்ரீகாந்த் ஆகியோா் வழங்கினாா். இதில் துணை ஆணையா் டிட்டோ, பொறியாளா் ராஜாராம், துணை மேயா் ஆனந்தய்யா, மாநகராட்சி வரி விதிப்பு குழுத் தலைவா் சென்னீரப்பா, கவுன்சிலா் நாகராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.