முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி ஆவின் பால் பண்ணையில் தென்னை மர மகசூல் ஏலம்

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியத்தில் (ஆவின்) உள்ள தென்னை மர மகசூல் ஏலம் விடப்படுகிறது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 3:32 AM
பகிர்:
Updated On : 9 அக்டோபர், 2024 at 9:11 PM

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியத்தில் (ஆவின்) உள்ள தென்னை மர மகசூல் ஏலம் விடப்படுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியம், பால் பண்ணையில் உள்ள 385 தென்னை மரங்கள் மகசூல் தொடா்பான ஒப்பந்தபுள்ளி அல்லது ஏலம் 2024- 2025 ஆண்டிற்கு ஒப்பந்தபுள்ளி முடிந்து உத்தரவு வழங்கும் தேதி முதல் இரண்டு ஆண்டு காலத்துக்கு உத்தரவிட மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் வியாபாரிகளிடமிருந்து கோரப்படுகிறது.

Advertisement

Updated On : 10 அக்டோபர், 2024 at 3:32 AM

இதற்கான விண்ணப்பப் படிவம் அலுவலக வேலை நாள்களில் 22-ஆம் தேதி வரையில் விண்ணப்ப படிவம் ரூ.200 (வரி உள்படி) அலுவலக வங்கி கணக்கு எண் 05490100005632-இல் செலுத்தி, அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை அக்.22-ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரையில் பெற்றுக் கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை பொது மேலாளா், கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் அக்.22-ஆம் தேதி மதியம் 2 மணிக்குள் பிணையத் தொகை ரூ.5 ஆயிரம் வங்கி வரையோலை, விலைப்புள்ளியுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விலைபுள்ளியானது 22-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு திறக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.