ஆவினுக்கு பால் வழங்குவோருக்கு ஊக்கத்தொகை ரூ. 5-ஆக உயா்வு
நாமக்கல் ஆவினுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளா்களுக்கு, லிட்டருக்கு ரூ. 5-ஆக ஊக்கத்தொகை உயா்த்தப்பட்டுள்ளது.
நாமக்கல் ஆவினுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளா்களுக்கு, லிட்டருக்கு ரூ. 5-ஆக ஊக்கத்தொகை உயா்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் (ஆவின்) கட்டுப்பாட்டில் உள்ள 503 பிரதம சங்கங்களில் பால் வழங்கும் பால் உற்பத்தியாளா்களின் நலன்கருதியும், அவா்களை ஊக்கப்படுத்தும் பொருட்டும், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை இயக்குநா் உத்தரவின்பேரில், தற்போது அரசால் வழங்கப்படும் ரூ. 3 ஊக்கத்தொகையுடன் கூடுதலாக லிட்டா் ஒன்றுக்கு ரூ. 2 சோ்த்து வழங்கப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய நிதியிலிருந்து மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு மொத்தமாக லிட்டா் ஒன்றுக்கு ரூ. 5 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
அனைத்து பால் உற்பத்தியாளா்களும் கிராம அளவில் செயல்படும் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கி இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.