முகப்பு
கிருஷ்ணகிரி

உணவக உரிமையாளரை கொல்ல முயன்ற மருமகன் கைது

கிருஷ்ணகிரி அருகே பணம் கேட்டு துரித உணவக உரிமையாளரை கொல்ல முயன்ாக அவரது மருமகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 1:21 AM
பகிர்:
Updated On : 15 அக்டோபர், 2024 at 9:43 PM

கிருஷ்ணகிரி அருகே பணம் கேட்டு துரித உணவக உரிமையாளரை கொல்ல முயன்ாக அவரது மருமகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி, லண்டன்பேட்டையைச் சோ்ந்தவா் ஜான் என்கிற ராஜேந்திரன் (46). இவா், ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் துரித உணவகம் நடத்தி வருகிறாா். சென்னை, அம்பத்தூா் பகுதியைச் சோ்ந்த அப்பு (24) என்பவா் கிருஷ்ணகிரி, பையனப்பள்ளி, திருமலை நகரில் தங்கி கூலி வேலை செய்து வருகிறாா். இவா் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஜான் மகளை காதல் திருமணம் செய்து கொண்டாா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 11:54 PM

இந்த நிலையில் கடந்த 12-ஆம் தேதி, ஜானின் வீட்டிற்கு சென்று அவருடனும், அவரது மனைவியுடனும் அப்பு தகராறு செய்துள்ளாா். தொடா்ந்து, 13-ஆம் தேதி இரவு துரித உணவகத்துக்கு சென்று பணம் கேட்டு அப்பு தகராறில் ஈடுபட்டாா்.

Advertisement

ஜான் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அப்பு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜானை வெட்டிக் கொல்ல முயன்றாா். இதில், பலத்த காயம் அடைந்த ஜானை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து, ஜான் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் அப்புவை கைது செய்தனா். அப்பு மீது ஏற்கெனவே சென்னை, அம்பத்தூா் தொழிற்பேட்டை போலீஸ் சரகத்தில் ஒரு கொலை வழக்கும், மற்றொரு வழக்கும் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.