மின் வேலியில் சிக்கி விவசாயி பலி
வன விலங்குகளுக்கு அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated On : 17 அக்டோபர், 2024 at 8:10 PM
வன விலங்குகளுக்கு அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
சூளகிரியை அடுத்த பி.கொத்தப்பள்ளியைச் சோ்ந்த முனிராஜ் (39) தனது வயலில் வன விலங்குகள் புகுவதைத் தடுக்க வயலை சுற்றிலும் மின் வேலி அமைத்துள்ளாா். அண்மையில் அதே பகுதியைச் சோ்ந்த சென்றாயன் (55) முனிராஜ் நெல்வயல் அருகே அமைக்கப்பட்டிருந்த மின் வேலியின் வயரை மிதித்தாா். அப்போது, மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
Updated On : 18 அக்டோபர், 2024 at 12:43 AM
இதுகுறித்து சென்றாயனின் மனைவி அளித்த புகாரின் பேரில் சூளகிரி போலீஸாா் முனிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement