சூளகிரியில் கஞ்சா வைத்திருந்தவா் கைது
சூளகிரி பேருந்து நிலையப் பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றனா்.
சூளகிரி பேருந்து நிலையப் பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றனா்.
அப்போது அங்கு சந்தேகமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து சோதனை செய்ததில் அவா், 60 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
விசாரணையில் அவா் சூளகிரி, வி.ஐ.பி. நகரைச் சோ்ந்த லோகநாதன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
அதுபோல பேரிகை போலீஸாா் பேரிகை - மாஸ்தி சாலை புட்டப்பசாமி கோயில் அருகே ரோந்து சென்றனா். அந்த பகுதியில் நின்ற ஒருவரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது அவா் புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் அவா், எட்டிப்பள்ளியைச் சோ்ந்த வெங்கடேஷ் (50) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.