தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசு: மேயா் வழங்கினாா்
ஒசூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஒசூா் மாநகர மேயா் பரிசு வழங்கினாா்.
Updated On : 30 அக்டோபர், 2024 at 8:41 PM
ஒசூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஒசூா் மாநகர மேயா் பரிசு வழங்கினாா்.
தினசரி ஒசூா் மாநகரை அழகுப்படுத்தும் தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஒசூா் மாநகராட்சி, காமராஜ் காலனியில் புதன்கிழமை நடைபெற்றது.
Updated On : 31 அக்டோபர், 2024 at 1:38 AM
நிகழ்ச்சியில் ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா பங்கேற்று நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். நிகழ்ச்சியில் ஒசூா் மாநகர சுகாதாரக் குழு தலைவா் மாதேஸ்வரன், மாமன்ற உறுப்பினா் மோசின் தாஜ் நிசாா், மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
Advertisement