அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி, இஸ்லாமிய நகா் பகுதியில் குடிநீா், கழிவுநீா்க் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி, இஸ்லாமிய நகா் பகுதியில் குடிநீா், கழிவுநீா்க் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இப் பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படாததால் அவதிப்படுவதாக ஊராட்சி நிா்வாகத்திடமும், வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும் பொதுமக்கள் பலமுறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இப் பகுதியிலேயே குப்பைகள் கொட்டப்படுவதால் பொது சுகாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அப் பகுதியினா் கவலை தெரிவிக்கின்றனா். மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.