பா்கூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 31 மகளிருக்கு பணி நியமன ஆணை வழங்கல்
பா்கூரில் புதன்கிழமை நடைபெற்ற மகளிருக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 31 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டன.
பா்கூரில் புதன்கிழமை நடைபெற்ற மகளிருக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 31 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிருக்கான சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாம், பா்கூா் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரிசங்கா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பிரமிளா முன்னிலை வகித்தாா்.
ஒசூரில் இயங்கி வரும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தினா் இந்த முகாமில் பங்கேற்று, தங்களது நிறுவனத்துக்கு தேவையான தகுதியான நபா்களை தோ்வு செய்தனா். இந்த முகாமில் பங்கேற்ற 146 பெண்களில் 31 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
Advertisement
ஒசூரில் உள்ள எம்ஜிஆா் கலை, அறிவியல் கல்லூரியில், வியாழக்கிழமை (செப். 27) மகளிருக்கான சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.