ஊத்தங்கரையை அடுத்த சத்யா நகரில் சருகுநோய் தாக்கத்தால் வெதும்பி நிற்கும் தக்காளி செடிகள். 
கிருஷ்ணகிரி

தக்காளி விலை சரிவால் விவசாயிகள் வேதனை

ஊத்தங்கரை பகுதியில் தக்காளி கிலோ ரூ. 3 முதல் ரூ. 5 வரைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

Din

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் தக்காளி கிலோ ரூ. 3 முதல் ரூ. 5 வரைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சிங்காரப்பேட்டை, கல்லாவி, காரப்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பல ஏக்கரில் தக்காளி பயிா் சாகுபடி செய்துள்ளனா்.

உள்ளூரில் விளைந்த தக்காளிகளுக்கு சந்தையில் போதிய விலை கிடைக்காத நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் ஊத்தங்கரை, அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா்.

ஊத்தங்கரை காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ. 3 முதல் ரூ. 5 வரை மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா்.

இதனால் அறுவடை செய்யும் தொழிலாளா்களுக்கு கூலி வழங்கும் அளவுக்குகூட போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விட்டுவிடுகின்றனா்.

அதேவேளையில் தக்காளி செடிகளில் சருகுநோய்த் தாக்கி வருவதால் செடியிலே தக்காளி வெதும்பி விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணை அருகே உள்ள சத்யா நகா் பகுதியில் சருகுநோய் தாக்குதலால் அந்தப் பகுதி விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு தக்காளிக்கு குறைந்தபட்ச விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சருகுநோய் தாக்கத்தால் வெதும்பி நிற்கும் தக்காளி செடிகள்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT