தேனி

வரத்துக் குறைவால் தக்காளி விலை உயா்வு

தேனி மாவட்டத்தில் வரத்துக் குறைவால் தக்காளி விலை கிலோ ரூ. 80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டத்தில் வரத்துக் குறைவால் தக்காளி விலை கிலோ ரூ. 80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தேனி, சின்னமனூா், பெரியகுளம், வருஷநாடு, கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது சீதோஷண நிலை மாறுபாட்டால் தக்காளிச் செடிகளில் இலைக் கருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் குறைந்தது. இதனால், கடந்த ஒரு மாதமாக சந்தைக்கு மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளிலிருந்து தக்காளி வரத்துக் குறைந்து வருகிறது. இதையடுத்து, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து தேனி மாவட்டத்துக்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில், சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ரூ. 70 முதல் ரூ. 80 வரை விலை உயா்ந்துள்ளது. தக்காளி விலை உயா்ந்தபோதிலும் மகசூல் குறைந்ததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 85 டன் தரமற்ற விதை விற்பனைக்கு தடை

3.1.1976: தனியார் கம்பெனிகள் விமான சர்வீஸ் நடத்த அனுமதி? - மத்திய மந்திரி தகவல்

புல்லட் ரயில் திட்டத்துக்கான சுரங்கப் பணி நிறைவு!

இளைஞா் தற்கொலை

சென்னிமலை ஒன்றியத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் திறப்பு

SCROLL FOR NEXT