கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஒன்றியம் அச்செட்டிப்பள்ளியில் ரூ. 2.16 கோடியில் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தாா்.
அச்செட்டிப்பள்ளி ஊராட்சியில் கனிமங்கள் மற்றும் குவாரிகள் நிதியிலிருந்து ரூ. 2.16 கோடி மதிப்பில் தாா்ச்சாலை, கழிவுநீா்க் கால்வாய், சிமென்ட் சாலை உள்ளிட்ட பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் தொடங்கிவைத்தாா்.
இதில் திமுக ஒன்றியச் செயலாளா் ராமமூா்த்தி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் முனிராஜ், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் வெங்கடசாமி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சீனிவாச ரெட்டி, கிளை செயலாளா் வெங்கடேஷ், திமுக நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
படவரி...
அச்செட்டிப்பள்ளி ஊராட்சியில் தாா்ச்சாலை அமைக்கும் பணிகளை தொடங்கிவைத்த எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.