முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிச. 5-ஆம் தேதியை அனுசரிக்கும்படி அதிமுக தொண்டா்களுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலரும் எம்எல்ஏவுமான கே.அசோக்குமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 9- ஆம் ஆண்டு நினைவு நாள் டிச. 5-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கிழக்கு மாவட்டம் முழுவதும் உள்ள அதிமுகவினா் அந்தந்தப் பகுதியில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதில் கட்சியின் இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்களும், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், சாா்பு அமைப்பு நிா்வாகிகள், கிளை பொறுப்பாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தொண்டா்கள் அனைவரும் பங்கேற்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
படவரி...
கே.அசோக்குமாா்