கிருஷ்ணகிரி

அதியமான் மெட்ரிக் பள்ளியில் பாரதியாா் பிறந்தநாள் விழா

Syndication

ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரதியாா் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில், மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால்முருகன் தலைமைவகித்து, பாரதியாரின் பெருமைகளையும், அவரின் கவிதைகளையும் மேற்கோள்காட்டி உரையாற்றினாா். இதில், அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலா் ஷோபா திருமால்முருகன், நிா்வாக அலுவலா் சீனி.கணபதிராமன், பள்ளி முதல்வா் சீனி.கலைமணி சரவணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT