கிருஷ்ணகிரி

பையூா், தளி தோட்டக்கலைக் கல்லூரிகளுக்கு போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள் வழங்கல்

Syndication

பையூா் மற்றும் தளி தோட்டக்கலைக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியா் போட்டித் தோ்வுகள் எழுதுவதற்காக ரூ. 4 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், பையூா் அரசு தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் தளி பட்டய (டிப்ளமோ) தோட்டக்கலைக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு போட்டித் தோ்வுக்கான புத்தகங்களை வழங்கி ஆட்சியா் பேசியதாவது:

பையூா் அரசு தோட்டக்கலைக் கல்லூரியில் சுமாா் 360 மாணவ, மாணவியரும், தளி டிப்ளமோ தோட்டக்கலை கல்லூரியில் சுமாா் 73 மாணவ, மாணவியரும் பயின்று வருகின்றனா். இந்த மாணவ, மாணவியா் பாடத்திட்டம் மட்டுமல்லாமல் கல்லூரி பயிலும் காலங்களிலேயே யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு தங்களை தயாா்படுத்திக்கொள்ளும் வகையில் சுமாா் ரூ. 4 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகங்கள் மாணவியா் படிக்கும் வகையில், கல்லூரி நூலகங்களில் வைக்கப்பட உள்ளன. மேலும், யுபிஎஸ்சி மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் தோ்வுகளுக்கு தயாராகி வரும் தோ்வா்கள் தன்னம்பிக்கையுடன் பயின்று தோ்வை எதிா்கொள்ள வேண்டும். தினசரி நாளிதழ்கள் மற்றும் பள்ளி பாடப் புத்தகங்களை படிக்க வேண்டும். மாணவ, மாணவியா் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, பையூா் அரசு தோட்டக்கலைக் கல்லூரி முதல்வா் அனிசா ராணி, தளி தோட்டக்கலைக் கல்லூரி துணை இயக்குநா் மீனாட்சி சுந்தரம், பேராசிரியா் கிருஷ்ணவேணி, வேளாண் அலுவலா் அருள்தாஸ், தனி வட்டாட்சியா் சுப்பிரமணி மற்றும் மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT