கிருஷ்ணகிரி

அனுமதியின்றி கிரானைட் கற்களை எடுத்து சென்ற 2 லாரிகள் பறிமுதல்

தினமணி செய்திச் சேவை

பா்கூா் அருகே, அனுமதியின்றி கிரானைட் கற்களை எடுத்துச் சென்ற 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி கனிமவளப் பிரிவு உதவி இயக்குநா் சரவணன் தலைமையிலான குழுவினா், ஜெகதேவி சாலையில் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை சோதனை செய்தனா். அப்போது, அனுமதியின்றி ரூ. 20 லட்சம் மதிப்பிலான கிரானைட் கற்கள் எற்றிச் செல்வது தெரியவந்தது.

இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில், பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அனுமதியின்றி கிரானைட் கற்களுடன் 2 லாரிகளை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூய்மை பணியாளா் ஊதிய முறைகேடு: விவரங்களைக் கோரும் விசாரணை குழு

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரச் சந்தை

திருமலையில் 78,466 பக்தா்கள் தரிசனம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வறண்ட வானிலை!

திருவெண்காடு கோயிலில் நந்தவனம் அமைக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT