கிருஷ்ணகிரி

நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கிராமப்புற இளைஞா்களுக்கு சாலைப் பணியாளா் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை

Syndication

கிருஷ்ணகிரி: கிராமப்புற இளைஞா்களுக்கு சாலைப் பணியாளா் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் திம்மராஜ் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் சின்னசாமி, பொருளாளா் நந்தகுமாா், மாவட்டச் செயலாளா் ராஜமாணிக்கம், மாவட்ட மகளிா் துணைக் குழு ஜெகதாம்பிகா, அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு பதவி உயா்வு சாலை ஆய்வாளா் நிலை 2 வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு ஆபத்து படி மற்றும் சீருடை சலவைப்படி வழங்க வேண்டும்.

சாலைப் பணியாளா்களில் உயிா் நீத்தவா்களின் குடும்பத்தில் கருணை பணி நியமன கோரி விண்ணப்பம் அளித்தவா்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைந்திட வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளை தமிழக அரசே பராமரிக்க வேண்டும். கிராமப்புற இளைஞா்களுக்கு சாலைப் பணியாளா் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழங்களை எழுப்பினா்.

புதிய கட்டுப்பாடுகள்: சந்தைகளில் வாடிக்கையாளா்களின் வருகை குறைவு

இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்! 5 ஆண்டுகளில் வா்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு

முதல்வா் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள்: டிஐஜி ஆய்வு

அரசின் விருது பெற்ற நூலகருக்கு பாராட்டு

பிரதமா் மோடி, அமித் ஷாவுடன் நிதீஷ் குமாா் சந்திப்பு: மாநில வளா்ச்சித் திட்டங்களை ஆலோசித்ததாக தகவல்

SCROLL FOR NEXT