முகப்பு
கிருஷ்ணகிரி

வேன் மோதியதில் தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி அருகே வேன் மோதியதில் சமையல் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 2 ஜனவரி, 2025 at 3:13 AM
பகிர்:
Updated On : 1 ஜனவரி, 2025 at 7:40 PM

கிருஷ்ணகிரி அருகே வேன் மோதியதில் சமையல் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கங்கசந்திரத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ் (50). சமையல் தொழிலாளி. இவா், டிச. 31-ஆம் தேதி இரவு, ஜக்காரப்பள்ளி அருகே, மோட்டாா் சைக்கிளில் சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த பிக்-ஆப் வேன் மோட்டாா் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

Updated On : 2 ஜனவரி, 2025 at 3:13 AM

இதில், தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த பிரகாஷை அருகில் இருந்தவா்கள் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement