முகப்பு
கிருஷ்ணகிரி

குடியரசு தின விழா முன்னேற்பாடுகள்: ஆட்சியா் தலைமையில் ஆலோசனை

குடியரசு தின விழா முன்னேற்பாடுகள்

Updated On : 9 ஜனவரி, 2025 at 4:40 AM
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமையில் நடைபெற்ற குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்.
பகிர்:
Updated On : 8 ஜனவரி, 2025 at 11:07 PM

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் குறித்து, பல்வேறு அரசுத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி, 2025 at 4:40 AM

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புஷ்பா, ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, தீயணைப்பு துறை, பள்ளி கல்வித் துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு திடலில் நடைபெறும் இந்த விழா குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.