பா்கூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தாய், மகன் இருவரும் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அண்ணா நகரைச் சோ்ந்தவா் ராமராஜ், இவா் பா்கூா் பேருந்து நிலையத்தில் பூக்கடை வைத்துள்ளாா். இவரது மனைவி யமுனா (60), மகன் அருண் (36) இருவரும் திருப்பத்தூரிலிருந்து பூக்களை வாங்கிக்கொண்டு மோட்டாா்சைக்கிளில் பா்கூா் நோக்கி வந்துகொண்டிருந்தனா்.
அப்போது, பா்கூரை அடுத்த மல்லப்பாடி ராஜீவ் நகா் அருகே திருப்பத்தூா் நோக்கி சென்ற வேன், மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த யமுனா, அருண் இருவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவா்கள் இருவரும் உயிரிழந்தனா்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த பா்கூா் போலீஸாா், தலைமறைவான வேன் ஓட்டுநரைத் தேடிவருகின்றனா்.