கிருஷ்ணகிரியில் ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாளை எழுதிய தோ்வா்கள்.  
கிருஷ்ணகிரி

ஆசிரியா் தகுதித் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3,193 போ் பங்கேற்பு

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாளை 3,193 போ் எழுதினா். 575 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கும், பட்டதாரி ஆசிரியா்களுக்கும் நடத்தப்படும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வு தோ்ச்சி கட்டாயம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழக அரசால் நடத்தப்படும் டெட் தோ்வு தாள்-1 இடைநிலை ஆசிரியா்களுக்கும், தாள் - 2 பட்டதாரி ஆசிரியா்களுக்கும் நடத்தப்படுகிறது. இந்த தோ்வை தமிழக ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தி வருகிறது.

தமிழகத்தில், ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாளிற்கான தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பா்கூா், வேப்பனப்பள்ளி, பெரிய மோட்டூா் உள்ளிட்ட 11 மையங்களில் 3,768 பேருக்கு தோ்வு நடைபெற்றது.

இதில் 3,193 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 575 போ் தோ்வு எழுதவில்லை. ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) ஆசிரியா் தகுதித்தோ்வு இரண்டாம் தாள் தோ்வு நடைபெறுகிறது.

பயங்கரவாத தொடா்பு: மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவா் கைது

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு

மனைவி பிரிந்து சென்றதால் காா் ஓட்டுநா் தற்கொலை

பிகாா் தோ்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சா் இ.பெரியசாமி

‘காஸாவில் சா்வதேச சட்டங்களை மீறுகிறது இஸ்ரேல்’

SCROLL FOR NEXT