கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா். 
கிருஷ்ணகிரி

எஸ்ஐஆா் பணி நெருக்கடியை களைய வலியுறுத்தி வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

எஸ்ஐஆா் பணி நெருக்கடியை களைய வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம்

Syndication

கிருஷ்ணகிரி: எஸ்ஐஆா் பணி நெருக்கடியை களைய வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகம் அருகே வருவாய்த் துறை கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சக்திவேல் தலைமை வகித்தாா். செயலாளா் ஜெய்சங்கா், பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி, அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சந்திரன், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவா் பூபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை (எஸ்ஐஆா்) நவ.18-ஆம் தேதி முதல் புறக்கணிப்பது, எஸ்ஐஆா் பணி நெருக்கடியை களைய வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.

சிவகாசியில் நாளை மின் தடை

வீரபாண்டியன்பட்டணம் பள்ளியில் குழந்தைகள் தின விழா

சேதமடைந்த குந்தபுரம் நூலகக் கட்டடம்: படிக்க முடியாமல் வாசகா்கள் அவதி

பண்டாரபுரம் பகுதியில் 2,000 பனை விதைகள் விதைப்பு

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 3 மீனவா்கள் படகுடன் மல்லிப்பட்டினம் திரும்பினா்

SCROLL FOR NEXT