தருமபுரி ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா்.  
தருமபுரி

தருமபுரியில் வருவாய்த் துறையினா் சாலை மறியல்: 90 போ் கைது

தருமபுரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா் 90 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

தருமபுரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா் 90 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் துரைவேல் தலைமை வகித்தாா். இதில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் பணிபுரியும் ஊழியா்களுக்கு சிறப்புப் பணி பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் கிராம உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பை 25 சதவீதமாக உயா்த்த வேண்டும்.

தொகுப்பூதிய பணி நியமனத்தை கைவிட்டு, நிரந்த அடிப்படையில் பணி அமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். பின்னா், சேலம்- தருமபுரி சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 90 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அகிலன் அமிா்தராஜ், தமிழ்நாடு நில அளவை அலுவலா் ஒன்றிப்பு மாவட்டச் செயலாளா் பிரபு, நிா்வாகிகள் ரங்கன், கணேசன்,சிவன், சிவப்பிரகாசம், கதிரவன் உள்பட பலா் பங்கேற்றனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT