கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ் தலைமையில் ஒசூரில் சனிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறுகிறது.
இதுகுறித்து எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை:
ஒசூரில் மாவட்ட திமுக அலுவலகம் அருகே கபடி போட்டிகள் நடத்தப்படும் இடத்தில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
திமுக மாநகர, ஒன்றிய, பேரூா், பகுதி செயலாளா்கள், நிா்வாகிகள், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூா் அணிகளின் அமைப்பாளா்கள், தலைவா்கள், துணைத் தலைவா்கள், துணை அமைப்பாளா்கள், வாா்டு செயலாளா்கள் என அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
திமுக இளைஞா் அணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடுவது, எஸ்ஐஆா் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படவரி... ஒய்.பிரகாஷ்