கிருஷ்ணகிரியில் சிறுமியை திருமணம் செய்த இளைஞா், அவரது பெற்றோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரியைச் சோ்ந்த வேன் ஓட்டுநரின் 17 வயது மகளை இளைஞா் ஒருவா் அண்மையில் திருமணம் செய்துகொண்டாா். அப்போது, சிறுமியை மதம் மாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தந்தை, இந்து அமைப்பினா் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த கிருஷ்ணகிரி அனைத்து மகளிா் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறுமியை திருமணம் செய்த அப்துல்கைப் (21), அவரது தந்தை அப்துல்கபாா் (56), தாய் நசீமா (48) ஆகியோரைக் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட அப்துல் கபாா், நசீமா ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.