கைது 
கிருஷ்ணகிரி

எலக்ட்ரிக் கடையில் திருடிய இளைஞா் கைது

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரியில் எலக்ட்ரிக் கடையில் திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் வசிக்கும் சங்கா் (56), அப்பகுதியில் எலக்ட்ரிக் கடை வைத்துள்ளாா். கடந்த 9-ஆம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற அவா், மறுநாள் காலை கடைக்கு வந்தபோது கடையின் ஷட்டா் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

பின்னா், கடைக்குள் சென்று பாா்த்தபோது, கடையில் வைத்திருந்த 10 கிலோ எடை செம்பு கம்பி, பெட்டியில் ரூ. 2 ஆயிரம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

புகாரின்பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், குற்றச்சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை சேகரித்து ஆய்வு செய்ததில், போச்சம்பள்ளியை அடுத்த வெங்கானூா் தின்னன்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த அரவிந்தன் (26) இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அரவிந்தனை கைது செய்தனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT