கிருஷ்ணகிரி

ஜல்லிக்கற்களை கடத்திய லாரி பறிமுதல்

தினமணி செய்திச் சேவை

ஒசூரிலிருந்து கா்நாடகத்துக்கு ஜல்லிக்கற்களை கடத்திய லாரியை வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் அறிவுறுத்தலின்பேரில் வருவாய்த் துறை, காவல் துறை கனிமவளத் துறை மூலம் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு, அனுமதியின்றி கனிமப் பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் ஒசூா் அருகே மத்திகிரி - அத்திப்பள்ளி சாலையில் ஞாயிற்றுக்கிழமை வருவாய்த் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இதில் அந்திவாடி சோதனைச் சாவடி அருகே உரிய அனுமதி சீட்டுகள் இன்றி ஜல்லிக்கற்கள் ஏற்றி சென்ற லாரியை பறிமுதல் செய்து, மத்திகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மத்திகிரி காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கற்களை கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

மோந்தா புயல்: சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை

வங்கக்கடலில் உருவானது மோந்தா புயல்: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

குழப்பங்கள் தீரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருமலையில் நிரம்பிய நீா்தேக்கங்கள்: பாபவிநாசனம் அணையில் சிறப்பு பூஜை!

பகுதி நேரவேலை அறிவிப்பால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவா்கள்!

SCROLL FOR NEXT