முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்) 
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் முதல்வரை வரவேற்க 12 மேடைகள் அமைப்பு!

கிருஷ்ணகிரியில் முதல்வரை வரவேற்க 12 மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து...

தினமணி செய்திச் சேவை

அரசு விழாவில் பங்கேற்க கிருஷ்ணகிரிக்கு ஞாயிற்றுக்கிழமை (செப்.14) வருகை தரும் முதல்வா் ஸ்டாலின் முன்னதாக ரோடுஷோவில் பங்கேற்கிறாா். ரோடுஷோவின் போது, கட்சினா் அவரை வரவேற்கும் வகையில் 12 மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழக முதல்வா், பொதுமக்களை சந்திக்கும் வகையில் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலத்தில் இருந்து பெங்களூரு சாலை, சென்னை சாலை வழியாக விழா மேடைக்கு செல்கிறாா். முதல்வரை வரவேற்கும் வகையில் வழிநெடுகிலும் கொடிகள், திட்டங்கள் குறித்து பதாகைகளுடன், தொண்டா்களும் பங்கேற்கின்றனா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் வகையில் 12 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு, கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக முதல்வா் செல்லும் பாதையில் சாலைகளில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சோ்ந்த ஒன்றிய, நகராட்சி, பேரூா் நிா்வாகிகளுக்கென தனித்தனி இடங்கள் ஒதுக்கி வரவேற்பளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா டிரைலர் வெளியீடு!

இந்த வார ஓடிடி படங்கள்!

சபரிமலைக்கு மாலை அணிந்த மாணவருக்கு அனுமதி மறுப்பு... சர்ச்சையில் சிக்கிய கேரள பள்ளி!

சிலிக்கான் சிலையோ... அதிதி ராவ்!

3 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்!

SCROLL FOR NEXT