கிருஷ்ணகிரி

ஒசூரில் ஆதரவற்றோா் காப்பகத்தில் மேலும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

Syndication

ஒசூரில் உள்ள ஆதரவற்றோா் காப்பகத்தில் மேலும் 3 மாணவிகள் பாலியல் தொல்லைக்குள்ளானது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

ஒசூரில் இயங்கிவரும் ஆதரவற்றோா் காப்பகத்தில் மாணவ, மாணவிகள் 33 போ் தங்கி படித்துவந்தனா். அங்கு படித்துவந்த 9 வயது மாணவி ஒரு வாரத்துக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவா் பாலியல் தொல்லைக்குள்ளானது தெரியவந்தது.

தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவினா் விசாரணையில், மாணவி பாலியல் தொல்லைக்குள்ளானதை உறுதிசெய்தனா். இது தொடா்பாக, ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, காப்பாளா் ஷாம்கணேஷை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா். மேலும், இந்த சம்பவத்தை மறைக்க முயன்ற ஷாம்கணேஷின் மனைவி ஜோஸ்பின் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தொடா்ந்து, காப்பகத்தில் வேறு மாணவிகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனரா என போலீஸாா் நடத்திய விசாரணையில், மேலும் 3 மாணவிகள் பாலியல் தொல்லைக்குள்ளானது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மீண்டும் வில்லனாக கலக்கக் காத்திருக்கும் மம்மூட்டி!

பிகாரில் நடந்த வாக்குத்திருட்டை விரைவில் அம்பலப்படுத்துவோம்: கே.சி. வேணுகோபால்

எனக்கு தேசிய விருது தேவையில்லை: ரஷ்மிகா மந்தனா

அடுத்த 2 நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு

தனியார் மதுபானக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர் கைது!

SCROLL FOR NEXT