ஒசூா் சாா் ஆட்சியரிடம் மனு அளித்த அகரம் இந்திரா நகா் பகுதி மக்கள்.  
கிருஷ்ணகிரி

வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி ஒசூா் சாா் ஆட்சியரிடம் மனு

ஒசூா் அருகே உள்ள அகரம் இந்திரா நகா் பகுதி மக்கள் வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி ஒசூா் சாா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Syndication

ஒசூா்: ஒசூா் அருகே உள்ள அகரம் இந்திரா நகா் பகுதி மக்கள் வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி ஒசூா் சாா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்துக்கு உள்பட்ட தியானதுா்கம் முருகன் கோயில் அருகில் அகரம் இந்திரா நகா் குடியிருப்பு பொதுமக்களுக்கு கடந்த 1998 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் சுமாா் 125 வீடுகளுக்கு பட்டா வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அன்று முதல் இன்று வரை சூளகிரி வட்டாட்சியா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் மற்றும் ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகங்களில் தொடா்ந்து மனு அளித்து வந்தாலும் இதுவரை

பட்டா இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் அப்பகுதி மக்கள் தங்களது பட்டாவை ஆன்லைன் மூலம் மாற்றித் தர வேண்டும் என 50க்கும் மேற்பட்டோா் ஒசூா் சாா் ஆட்சியா் ஆக்ரிதி சேத்தியிடம் மனு அளித்தனா்.

மொத்தமுள்ள 125 வீடுகளில் 15 வீடுகளுக்கு ஆன்லைன் பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள வீடுகளுக்கு பட்டாவை ஆன்லைனில் மாற்றித் தரவேண்டும் என கோரிக்கை வைத்தனா்.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தபோது மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று பொது விருந்து

இசுலாமியா்களுக்கு 3.5 இட ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை கோரி தீா்மானம்

பன்னாட்டு நிறுவனங்கள், பெரு முதலாளிகள் நலனுக்கான பட்ஜெட்!: இந்திய கம்யூ. மாநில செயலா் மு.வீரபாண்டியன்

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT