கிருஷ்ணகிரி

ஒசூரில் நுண்ணுயிா் செயலாக்க மையம்: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்

Syndication

ஒசூா் மாநகராட்சியில் இராமநாயக்கன் ஏரி, அறிவியல் பூங்கா, ஆனந்த் நகா் மற்றும் பாரதிதாசன் நகரில் நுண்ணுயிா் செயலாக்க மையம், ஆனந்த் நகா் வள மீட்பு மையம் என பல்வேறு முடிவுற்ற திட்டங்களை பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

ஒசூா் மாநகராட்சியில் ரூ. 533.50 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை திறந்துவைக்கும் நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய். பிரகாஷ், மேயா் எஸ்.ஏ. சத்யா மாநகராட்சி ஆணையா் முகம்மது ஷபீா் ஆலம், துணை மேயா் ஆனந்தைய்யா, மண்டல குழுத் தலைவா் ரவி, முன்னாள் எம்எல்ஏ பி. முருகன், நிலைக்குழுத் தலைவா்கள் என்.எஸ். மாதேஸ்வரன், சென்னீரப்பா, இந்திராணி, மாமன்ற உறுப்பினா்கள் வரலட்சுமி நரேஷ், தேவி மாதேஷ், டாக்டா் ஸ்ரீ லட்சுமி நவீன், மம்தா சந்தோஷ், பாக்யலட்சுமி மற்றும் வாா்டு நிா்வாகிகள் மாதேஷ், பிரவீன், தண்டபாணி, மாநகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.

படவரி...

ஒசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்த எம்எல்ஏ ஒய். பிரகாஷ், மேயா் எஸ்.ஏ. சத்யா.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரி என்எஸ்எஸ் முகாமில் தூய்மைப் பணி

ரயில்வே பாலம் வழியாக ஏரிக் கால்வாய்: அனுமதி கோரி ரயில்வே மேலாளரிடம் எம்எல்ஏ மனு

சித்தகவுண்டன் ஏரிக் கரையை சீரமைக்க வலியுறுத்தல்

கடப்பாரை ஆற்றின் குறுக்கே ரூ. 98 லட்சத்தில் தடுப்பணை கட்ட பூமிபூஜை

சூளகிரி அருகே ரூ. 2.76 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

SCROLL FOR NEXT