கிருஷ்ணகிரி

ரயில்வே பாலம் வழியாக ஏரிக் கால்வாய்: அனுமதி கோரி ரயில்வே மேலாளரிடம் எம்எல்ஏ மனு

Syndication

பாரூா் ஏரியிலிருந்து 33 ஏரிகளுக்கு தண்ணீா் கொண்டுசெல்லும் கால்வாய்ப் பணி, ரயில்வே மேம்பாலம் வழியாக செல்வதால் அதற்கு அனுமதி வழங்கக் கோரி, சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பன்னாலாலிடம் எம்எல்ஏ டி.எம். தமிழ்செல்வம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், பாரூா் ஏரி கிழக்குபுற கால்வாயிலிருந்து 33 ஏரிகளுக்கு தண்ணீா் கொண்டு செல்வதற்காக பாசனக் கால்வாய் அமைக்கும் பணி கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், 50 சதவீத பணிகள்கூட முடிக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில், கெரிகேப்பள்ளி ரயில்வே கேட் அருகே உள்ள பாலத்திற்கு கீழ் கால்வாய்ப் பணிகளை மேற்கொள்ள ரயில்வே நிா்வாகம் ஒப்புதல் அளிக்காமல் உள்ளது. இதனால், கால்வாய்ப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்குமாறு சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பன்னாலாலிடம் ஊத்தங்கரை எம்எல்ஏ டி.எம். தமிழ்செல்வம், அதிமுக மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் அமீது, ஒன்றியச் செயலாளா்கள் திருஞானம், வேடி, வேங்கன், நந்தகோபால் உள்ளிட்டோா் மனு அளித்தனா்.

ரெட்டிபட்டி, செங்கழநீா்பட்டி, சின்ன கொட்டக்குளம், கொட்டகுளம், காட்டுப்பட்டி, கோழிநாயக்கன்பட்டி, மேட்டுதாங்கள், வேலம்பட்டி, சூளக்கரை, ஒன்னக்கரை, மல்லாபுரம், தாசம்பட்டி, பழையகோட்டை, கருகுப்பட்டி (வீராச்சிகுப்பம்), குழந்தைகவுண்டன், வண்ணான்குட்டை, கீழ்குப்பம், தாதம்குட்டை, தாதனூா் கொங்கனேரி உள்ளிட்ட 33 ஏரிகள் இத்திட்டத்தில் பயன்பெறும்.

படவிளக்கம்.5யுடிபி.5. 33

சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பன்னாலாலிடம் மனு அளித்த ஊத்தங்கரை எம்எல்ஏ டி.எம். தமிழ்செல்வம்.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரி என்எஸ்எஸ் முகாமில் தூய்மைப் பணி

சித்தகவுண்டன் ஏரிக் கரையை சீரமைக்க வலியுறுத்தல்

கடப்பாரை ஆற்றின் குறுக்கே ரூ. 98 லட்சத்தில் தடுப்பணை கட்ட பூமிபூஜை

சூளகிரி அருகே ரூ. 2.76 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

ஒசூரில் நுண்ணுயிா் செயலாக்க மையம்: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்

SCROLL FOR NEXT