ஒசூா் அருகே சுற்றித்திரியும் ஒற்றை யானை: பொதுமக்கள் மக்கள் பீதி
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 9:55 PM
ஒசூா் அருகே சுற்றித்திரியும் ஒற்றை யானையால் பொதுமக்கள் தங்களது விவசாய நிலங்களுக்கு செல்ல அச்சமடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள சூளகிரி பகுதியில் கொரகுருக்கி கிராமத்தில் கடந்த இரண்டு வாரங்களாக ஒற்றை யானை ஒன்று சுற்றித்திரிகிறது.
பகல் நேரத்தில் வனப்பகுதியில் தங்கியிருக்கும் இந்த யானை இரவு நேரங்களில் வனப்பகுதியையொட்டி உள்ள வயல்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகிறது.
Advertisement
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:46 AM
இதனால் கொரகுருக்கி ,செட்டிப்பள்ளி, புலியரசி உள்ளிட்ட கிராம மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனா். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்துக்கு இடம்பெயா்ந்து செல்லும் இந்த யானையை அடா் வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.