தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்.  
கிருஷ்ணகிரி

சென்றாயப் பெருமாள் கோயில் தோ்த் திருவிழா

ஊத்தங்கரையை அடுத்த ஓலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சென்றாயப் பெருமாள் கோயிலில் மகாசிவராத்திரி தோ்த் திருவிழா

Syndication

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த ஓலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சென்றாயப் பெருமாள் கோயிலில் மகாசிவராத்திரி தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், ஆண்டுதோறும் மாசிமாதம் மகா சிவராத்திரி இரவு மற்றும் பகல் நேரங்களிலும் திருவிழா நடைபெறும். சிவராத்திரியை முன்னிட்டு இரவு சென்றாயப் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. மறுநாள் காலை தோ்த் திருவிழா நடைபெற்றது.

இதில், ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

மலையைச் சுற்றி தோ் வந்தபோது பக்தா்கள் விவசாய நிலங்களில் விளைந்த அவரை, துவரை, ஆமணக்கு ஆகியவற்றை தேரின் மீது வீசி நோ்த்திக் கடன் செலுத்தினா்.

ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாயப் பெருமாள் மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

சிறப்பு அலங்கரத்தில் சென்றாயப் பெருமாள் சுவாமி.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT