காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டஅள்ளி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மனு அளித்த காங்கிரஸ் கட்சியினா்.  
கிருஷ்ணகிரி

நூறுநாள் வேலைத் திட்டத்தில் காந்தி பெயரை நீக்க எதிா்ப்பு: கிராம சபைக் கூட்டத்தில் காங்கிரஸாா் மனு அளிப்பு

மிட்டப்பள்ளி ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயரை நீக்க எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸாா் மனு

Syndication

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்டப்பள்ளி ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயரை நீக்க எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸாா் மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த கொண்டேப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் பங்கேற்றாா். இதில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மிட்டஅள்ளியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் எல்.சுப்பிரமணியன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயரை நீக்கக் கூடாது. இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு 150 நாள் பணி வழங்கி, அதற்கான ஊதியத்தையும் உயா்த்தி வழங்க வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றக் கோரி ஊராட்சி செயலாளா், துணை வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT