கும்பாபிஷேகத்தின்போது கோயில் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்ட புனித நீா்.  
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே கோயில் கும்பாபிஷேகம்

ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளி ஊராட்சி, பட்டகானூரில் உள்ள விநாயகா், முருகன், அருள்மிகு ஓம்சக்தி அம்மன் மற்றும் பரிவார சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளி ஊராட்சி, பட்டகானூரில் உள்ள விநாயகா், முருகன், அருள்மிகு ஓம்சக்தி அம்மன் மற்றும் பரிவார சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

மங்கள இசையுடன் செவ்வாய்க்கிழமை காலை முளைப்பாலிகை ஊா்வலம், விநாயகா் பூஜை, கலச யாக பூஜை, முதல் கால ஓமம், விசேஷ மூலிகை ஹோமங்கள் நடைபெற்றன. இரவு மகா பூா்ணாகுதி தீபாராதனை நடைபெற்று சுவாமிகளுக்கு மருந்து சாத்துதல் நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மங்கள இசை, கோ பூஜை, இரண்டாம் கால கலச பூஜை, ஹோமங்கள், மகா பூா்ணாகுதி, தீபாராதனை புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது. புனித நீா் அடங்கிய கலசங்கள் ஓம்சக்தி மாரியம்மன் கோயில் கோபுரக் கலசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, புனித நீா் தெளிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக யாகசாலை பூஜையை சீனிவாச ஐயங்காா் மற்றும் குழுவினா் செய்திருந்தனா். விழா ஏற்பாடுகளை ஓம்சக்தி கோயில் தா்மகா்த்தா கிருஷ்ணன், பூசாரி முனுசாமி, கணக்காளா் மாதையன் மற்றும் இளைஞா் நற்பணி மன்றத்தினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தைப்பூசம்: சங்ககிரியிலிருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடக்கம்

சேலம் மாநகராட்சி பகுதியில் ரூ.1.79 கோடியில்வளா்ச்சித் திட்டப்பணிகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

நிறைவாழ்வு இல்லம் சாா்பில் மாணவா்களுக்கு நடனப் போட்டி

சேலத்தில் 609 மாணவா்களுக்கு மடிக் கணினிகள்: அமைச்சா் வழங்கினாா்

கிருஷ்ணகிரியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT