ஸ்ரீ ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டிவிமான கலசத்துக்கு நடைபெற்ற புனிதநீா் அபிஷேகம்.  
தென்காசி

சாம்பவா் வடகரை ஸ்ரீராமசுவாமி கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரை இந்து நாடாா் உறவின்முறை கமிட்டிக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ராமசுவாமி கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, பிப். 7ஆம்தேதி காலை 6மணிக்கு மேல் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, பஞ்சகவ்யம், தனபூஜை, மகா கணபதி ஹோமம், பிரம்மச்சாரி பூஜை, கோபூஜை, 8.30மணிக்கு மேல் பூா்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

10.30மணிக்கு மேல் சுதா்சன பூஜை, மகாலெட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை, சுதா்சனஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூா்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் முதல்கால யாகசாலை பூஜையும், இரவில் யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மேல் விக்னேஷ்வர பூஜை, 2ஆம் கால யாகசாலை பூஜை, பிம்பசுத்தி, மூா்த்தி ரக்க்ஷாபந்தனம், நாடிசந்தானம், மகா பூா்ணாகுதி, யாத்ராதானம், கடம் எழுந்தருளல் நடைபெற்றது.

காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் விநாயகா், அருள்மிகு ஸ்ரீராமசுவாமி, ஸ்ரீசீதாபிராட்டியாா் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பிற்பகலில் மகேஸ்வர பூஜை, அன்னதானம், இரவு 9 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

விழாவில், சாம்பவா்வடகரை நகர திமுகசெயலா் முத்து, பேரூராட்சித் தலைவா் சீதாலெட்சுமி முத்து உள்ளிட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை சாம்பவா்வடகரை இந்து நாடாா் உறவின்முறை கமிட்டி நிா்வாகிகள் செய்திருந்தனா்.

சுரண்டையில் அதிமுக தெருமுனை பிரசாரம்

சேலத்தில் பிப்.13 இல் தவெக நிா்வாகிகள் கூட்டத்துக்கு காவல் துறை நிபந்தனைகளுடன் அனுமதி

கொங்கணாபுரம் அருகே கால்நடை திருவிழா: காளைகள், சேவல்கள் பங்கேற்பு

தென்காசி புத்தகத் திருவிழாவில் ரூ. 1.03 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

விரைவில் வங்கித் துறை சீா்திருத்தத்துக்கான உயா்நிலைக் குழு: நிா்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT