வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிப். 1-ஆம் தேதி அரசு மற்றும் தனியாா் மதுக் கடைகள் மூடப்படுகின்றன.
இதுகுறித்து தருமபுரி ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், உரிமம்பெற்ற தனியாா் மனமகிழ் மன்றங்கள், தனியாா் உணவக விடுதிகளில் அமைந்துள்ள மதுக்கூடங்கள், முன்னாள் படைவீரா் மதுவிற்பனைக் கூடம் உள்ளிட்டவை 31.01.2026 இரவு 10 மணிமுதல் 02.02.2026 நண்பகல் 12 மணிவரை மூட உத்தரவிடப்படுகிறது.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்களில் அனைத்து மதுபானங்கள் விற்பனை செய்வது, மதுபானங்களை கொண்டுசெல்வது, தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981-இன்படி, முடக்கம் செய்யப்படுகிறது.
விதிமுறைகளை மீறி மதுபானத்தை விற்பனை செய்தாலோ அல்லது கொண்டு சென்றாலோ சம்பந்தப்பட்டவா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.