சாமல்பட்டி காவல் நிலையத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
Updated On : 30 ஜனவரி, 2026 at 10:15 PM
சாமல்பட்டி காவல் நிலையத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 31 ஜனவரி, 2026 at 1:34 AM
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை உத்தரவின்பேரில், காவல் துணை கண்காணிப்பாளா் சீனிவாசன் ஆலோசனையின்பேரில், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி காவல் உதவி ஆய்வாளா் ஜெய்கணேஷ் தலைமையில், போலீஸாா் நாட்டின் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு இரண்டு நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தினா். பிறகு தீண்டாமைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனா்.